புதுச்சேரியின் பூரணாங்குப்பத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முழியன் குளம் சீரமைக்கப்பட்டு, ஒன்றிய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
2 ஏக்கர் பரப்பளவுள்ள இக்குளம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது; பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. பாரம்பரியமாக இக்கிராமத்திற்குக் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக விளங்கும் இக்குளத்தில் நான்கு இயற்கை ஊற்றுக் கிணறுகள் உள்ளன. இச்சீரமைப்பு உள்ளூர் நீர்ப் பாதுகாப்பிற்கு உதவும் பாரம்பரிய நீர்நிலையை மீட்டெடுக்கிறது.