அதிகரித்து வரும் டிஜிட்டல் கைது மோசடிகளை எதிர்கொள்ள, இணைய மோசடி வருமானத்தைச் சலவை செய்யப் பயன்படும் 'மியூல்' வங்கிக் கணக்குகளைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) நான்கு வாரங்களுக்குள் வகுக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மின்-பூஜ்ய முதல் தகவல் அறிக்கை (e-Zero FIR) மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுக் கட்டமைப்புகளை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டோருக்கான பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் இழப்பீட்டுத் திட்டத்தின் சாத்தியத்தை ஆராயுமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொண்டது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) தாக்கல் செய்த நான்காவது நிலை அறிக்கையைப் பரிசீலித்த பின் இவ்வுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.