ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஏற்பாடு செய்த 'பர்ப்பிள் ஃபெஸ்ட்' (Purple Fest), குடியரசுத் தலைவர் மாளிகையில் (ராஷ்டிரபதி பவன்) நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் (திவ்யாங்ஜன்) சாதனைகளைக் கொண்டாடி, அவர்களின் திறமைகள், சாதனைகள், விருப்பங்களை அங்கீகரிப்பதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை இந்த விழா ஊக்குவித்தது.