பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பங்கேற்பை ஊக்குவிக்கவும், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் சின்னங்களாக (Mascots) பிரகதி மற்றும் விகாஸை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பிரகதி பெண் கணக்கெடுப்பாளரையும், விகாஸ் ஆண் கணக்கெடுப்பாளரையும் குறிக்கின்றனர்; நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமப் பங்கு உண்டு என்பதை இவை அடையாளப்படுத்துகின்றன. கைப்பேசிச் செயலிகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படுவதால், 2027 கணக்கெடுப்பு நாட்டின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாக இருக்கும். இது வீடுகள் பட்டியலிடல் மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பு (HLO), மக்கள்தொகைக் கணக்கீடு (PE) என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.