'விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல்: இயற்கை வேளாண்மை பயிற்சிக் கருவித்தொகுப்பு மற்றும் சிறந்த நடைமுறைகள் வழிகாட்டி' (Empowering Farmers: Natural Farming Training Toolkit & Best Practices Guide) என்ற தலைப்பிலான அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இயற்கை வேளாண்மை என்பது ரசாயனமற்ற, கால்நடை அடிப்படையிலான வேளாண் முறை; பயிர்கள், மரங்கள், விலங்குகளை ஒருங்கிணைத்து பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்துகிறது. வழக்கமான வேளாண்மையைப் போலன்றி, வெளி ரசாயன இடுபொருட்களைத் தவிர்த்து இயற்கைச் சூழலியல் செயல்முறைகளைச் சார்ந்துள்ளது. இம்முறை சாகுபடிச் செலவைக் குறைத்து, விவசாய வருமானத்தை உயர்த்தி, மண்ணின் கரிமக் கார்பன் மற்றும் நுண்ணுயிர்ச் செயல்பாட்டை மேம்படுத்துகிறது; நீர், மின்சாரத்தைச் சேமித்து பசுமை இல்ல வாயு உமிழ்வையும் கணிசமாகக் குறைக்கிறது.