ஒன்றிய மின்துறை அமைச்சகம் பொதுமக்கள் கருத்துக்காக வரைவு தேசிய மின்சாரக் கொள்கை 2026-ஐ வெளியிட்டது. இது 2005-ஆம் ஆண்டுக் கொள்கைக்கு மாற்றாக அமைவதுடன், 2047 வரையிலான மின்துறைக்கான திட்டத்தை வகுக்கிறது. 2030-க்குள் தனிநபர் மின் நுகர்வு 2,000 கிலோவாட் மணி (kWh), 2047-க்குள் 4,000 kWh; 2030-க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) உமிழ்வுச் செறிவை 2005 அளவிலிருந்து 45% குறைத்தல் ஆகியவை இலக்குகளில் அடங்கும். 2070-க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு, 2047-க்குள் சிறிய மட்டு அணு உலைகள் உட்பட 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்தி ஆகியவை பிற இலக்குகள்.