ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தேசிய விளையாட்டு விருதுகள் 2025-ஐ அறிவித்தது; மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு எந்த வீரரும் தேர்வு செய்யப்படவில்லை. சதுரங்க வீரர்கள் விதித் குஜராத்தி, திவ்யா தேஷ்முக், தடகள வீரர் தேஜஸ்வின் ஷங்கர், பூப்பந்து வீராங்கனைகள் காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. முன்னாள் கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான ஐ. அருமைநாயகம் அர்ஜுனா (வாழ்நாள்) விருது பெற்றார். பர்வீர் சிங் (தடகளம்), சோட்டே லால் யாதவ் (குத்துச்சண்டை), நேஹா நந்தகுமார் சவான் (துப்பாக்கிச் சுடுதல்), தர்மேந்திர சிங் யாதவ் (குத்துச்சண்டை), வீரேந்தர் குமார் (மல்யுத்தம்) ஆகியோருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது. புனே ராணுவ பாராலிம்பிக் மையம் 'ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார்' பெற்றது.