ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மூலம், அதிக நச்சுத்தன்மை கொண்ட தேர்வற்ற களைக்கொல்லியான பாராகுவாட் டைகுளோரைடுக்கு ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது. பாராகுவாட், களைக் கட்டுப்பாட்டுக்கும் பயிர்களை உலர வைப்பதற்கும் பயன்படும், விரைவாகச் செயல்படும் பரந்த நிறமாலை தொடு களைக்கொல்லியாகும். உட்கொண்டால் மிகுந்த நச்சுத்தன்மை கொண்டது; முற்போக்கான நுரையீரல் நார்ப்பெருக்கம் (pulmonary fibrosis) உள்ளிட்ட கடுமையான நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தும். மனித உடல்நலம், கால்நடைகள், சுற்றுச்சூழலுக்கான அபாயங்களை நிபுணர்கள் மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவில் பூச்சிக்கொல்லிகளின் இறக்குமதி, உற்பத்தி, விற்பனை, போக்குவரத்து, விநியோகம், பயன்பாடு ஆகியவை பூச்சிக்கொல்லிகள் சட்டம், 1968-இன் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.