தேசியப் பாடலுக்கு அங்கீகாரம்: 1971 சட்டத்தில் புதிய திருத்தம்
தேசிய கீதத்திற்கு (ஜன கண மண) இணையான சட்டப்பூர்வ பாதுகாப்பை வந்தே மாதரம் பாடலுக்கும் வழங்க மத்திய அமைச்சரவை முன்மொழிந்துள்ளது. இதற்காக தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம், 1971-ல் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இப்பாடலை அவமதிப்பது அல்லது பாடுவதைத் தடுப்பது தண்டனைக்குரியக் குற்றமாகக் கருதப்படும்.
வரலாற்றுப் பின்னணி:
- ஆசிரியர்: 1882-ல் பங்கிம் சந்திர சட்டோபாத்யாய எழுதிய 'ஆனந்தமடம்' நாவலில் இது முதன்முதலில் வெளியானது.
- தற்போதைய நிலை: இந்திய அரசியலமைப்பு இதற்குத் தேசியப் பாடல் அந்தஸ்து வழங்கினாலும், தற்போது இதற்குத் தனிச்சட்டப் பாதுகாப்பு இல்லை.
- தண்டனை: புதிய திருத்தத்தின்படி, இப்பாடலை அவமதிப்போருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.