இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வழங்கும் உரிமங்களுக்கு வாழ்நாள் செல்லுபடி வழங்க ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் உணவு வணிகர்கள் உரிமத்தை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டியதில்லை; ஆவணப் பணிகளும் இணக்கச் செலவுகளும் குறையும். அடிப்படைப் பதிவுக்கான விற்றுமுதல் வரம்பு ₹12 லட்சத்திலிருந்து ₹1.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் அல்லது நகர விற்பனைக் குழுக்களில் பதிவு செய்த தெருவோர உணவு விற்பனையாளர்கள் FSSAI-இல் தானாகப் பதிவு செய்தவர்களாகக் கருதப்படுவர். உணவுப் பாதுகாப்புக் கண்காணிப்பை வலுப்படுத்த, இடர் அடிப்படையிலான, தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வு முறையும் அறிமுகப்படுத்தப்படும்.