தனியார் பள்ளிகளில் சில செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள், 2023-ல் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்துள்ளது.
- அரசியல், கருத்தியல், மதவாத அல்லது பிளவுபடுத்தும் தன்மையுள்ள நிகழ்ச்சிகளைப் பள்ளிகள் நடத்தக்கூடாது.
- கல்விக்குத் தொடர்பில்லாத கூட்டங்கள், பிரச்சாரங்கள், நடவடிக்கைகளுக்கு வெளிநபர்களோ சங்கங்களோ அமைப்புகளோ பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தக்கூடாது.
- மதம், சாதி, இனம், சமூகம், மொழி அல்லது கருத்தியல் அடிப்படையில் நல்லிணக்கமின்மை அல்லது வெறுப்பைத் தூண்டும் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
- கலாச்சார நிகழ்வுகள், சமூக சேவை நிகழ்ச்சிகள், இரத்ததான முகாம்கள், நினைவு விழாக்கள் ஆகியவை அரசியல் சார்பற்ற, பிரிவினைவாதமற்றவையாக இருந்து, அரசின் முன் அனுமதி பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படும்.