கேரள பூர்வீக அட்டை மசோதாவை (Kerala Nativity Card Bill) நில வருவாய் மற்றும் தேவஸ்வம் தொடர்பான பொருள் குழுவின் ஆய்வுக்குக் கேரளச் சட்டமன்றம் அனுப்பியுள்ளது.
- கேரள மக்களுக்கான அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றாக விளங்கும் பூர்வீக அட்டை முயற்சிக்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவதே இம்மசோதாவின் நோக்கம்.
- நிரந்தர அடையாளத்துக்காகப் புகைப்படத்துடன் கூடிய இந்த அட்டை, தற்போதுள்ள பூர்வீகச் சான்றிதழுக்குப் பதிலாக அமையும்.
- கேரளாவில் பிறந்தவர்கள் அல்லது கேரளாவில் பிறந்த மூதாதையரைக் கொண்டவர்கள், வெளிநாட்டுக் குடியுரிமை பெறாத நிலையில், இதனைப் பெறலாம்.