2026-ல் இந்தியா அரிய புவி நிரந்தரக் காந்தங்களின் உற்பத்தியைத் தொடங்கும் என ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சர் தெரிவித்தார். 2025 நவம்பரில் அமைச்சரவை ஒப்புதல் அளித்த ₹7,280 கோடி மதிப்பிலான திட்டம், ஆண்டுக்கு 6,000 டன் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது. மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்னணுவியல், விண்வெளி, பாதுகாப்புத் துறைகளுக்கு இக்காந்தங்கள் இன்றியமையாதவை. ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத்தில் முக்கியக் கனிமச் செயலாக்கப் பூங்காக்கள் அமைக்கப்படும்; பழைய கைபேசிகள், மின்னணுக் கழிவுகளிலிருந்தும் கனிமங்கள் மீட்கப்படும்.