1 பிப்ரவரி 2026 முதல், புகையிலை மற்றும் பான் மசாலா மீதான ஜிஎஸ்டி இழப்பீட்டு மேல்வரிக்கு (GST Compensation Cess) பதிலாக இரண்டு புதிய வரிகளை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. புகையிலைப் பொருட்களுக்குக் கூடுதல் கலால் வரியும், பான் மசாலாவுக்குச் சுகாதார மற்றும் தேசியப் பாதுகாப்பு மேல்வரியும் விதிக்கப்படும். சிகரெட், புகையிலை மற்றும் பான் மசாலா 40% ஜிஎஸ்டி வரி அடுக்கில் இடம்பெறும்; பீடிக்கு 18% வரி தொடரும். இழப்பீட்டு மேல்வரி முடிவடைந்த பின்னரும் இப்பொருட்கள் மீதான அதிக வரிச்சுமை தொடர இம்மாற்றம் வழிவகுக்கிறது.