மூத்த குடிமக்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த, ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 2026 நவம்பர் 4 அன்று 'வயோ சம்மான் ராஷ்ட்ரிய அபியான்' (Vayo Samman Rashtriya Abhiyan) இயக்கத்தைத் தொடங்கியது. அடல் வயோ அப்யுதய் யோஜனா (AVYAY) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இது, தலைமுறைகளுக்கு இடையே மரியாதை, தோழமை, பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. இணைதல் (Connect), உரையாடல் (Converse), இணைந்து உருவாக்குதல் (Co-create), பங்களித்தல் (Contribute), தொடர்தல் (Continue) என்ற 5C கட்டமைப்பை இது பின்பற்றுகிறது. 18 வயதும் அதற்கு மேற்பட்டோரும் SCW SAMAVESH இணையதளம் அல்லது JEEVAN செயலி மூலம் பதிவு செய்து 'வயோ SAATHI' தன்னார்வலர் இயக்கத்தில் சேரலாம். டிஜிட்டல் கல்வியறிவு, சுகாதார விழிப்புணர்வு, தோழமை, தலைமுறைகளுக்கு இடையிலான திறன் பகிர்வு உள்ளிட்ட 12 கருப்பொருள் பகுதிகளை இது உள்ளடக்கியது.