கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை (DAHD), ICAR–தேசிய கால்நடை நோய்ப்பரவியல் மற்றும் நோய்த் தகவலியல் நிறுவனத்துடன் (NIVEDI) இணைந்து, கோமாரி நோயின் (FMD) SAT-1 வகை (serotype) இந்தியாவுக்குள் நுழையக்கூடும் என்பதற்குத் தயாராக, பெங்களூருவில் இரண்டு நாள் VAJRA-SAT பயிற்சியை நடத்தியது. கருப்பொருள்: “Detect Early, Confirm Fast, Contain Together”. நோய் கண்டறிதல், ஆய்வக நோயறிதல், நோய்ப்பரவியல் விசாரணை, கால்நடை நடமாட்டக் கட்டுப்பாடுகள், அவசரத் தடுப்பூசி, இடர் தகவல் தொடர்பு ஆகியவை இப்பயிற்சியில் சோதிக்கப்பட்டன. கோமாரி என்பது பிளவுபட்ட குளம்புகள் கொண்ட விலங்குகளைப் பாதிக்கும், Foot-and-Mouth Disease Virus (FMDV) வைரஸால் ஏற்படும் மிக வேகமாகப் பரவும் நோய். இதற்கு O, A, C, SAT-1, SAT-2, SAT-3, Asia-1 என ஏழு வகைகள் உள்ளன; இவற்றில் O, A, Asia-1 மட்டுமே இந்தியாவில் பதிவாகியுள்ளன.