ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள தனது மேற்கு பொகாரோ பிரிவில் டாடா ஸ்டீல் நிறுவனம் ஹைட்ரோசீடிங் (Hydroseeding) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது; இது 50 ஏக்கருக்கும் அதிகமான சுரங்க நிலங்கள், நாற்றங்கால்கள், மேல்மண் குவியல்கள் (overburden dumps) ஆகியவற்றை உள்ளடக்குகிறது. விதைகள், மூடாக்கு (mulch), உரம், பிணைப்பான்கள், மண் சீரமைப்புப் பொருள்கள் கலந்த கரைசலை வெற்று நிலத்தின் மீது தெளிக்கும் இயந்திரமயமாக்கப்பட்ட நடவு முறையே ஹைட்ரோசீடிங். மூடாக்கு ஈரப்பதத்தைத் தக்கவைத்து, விதைகளைப் பாதுகாத்து, காற்று மற்றும் நீரால் ஏற்படும் மண் அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. சுரங்க நில மீட்பு, சரிவு நிலைப்படுத்தல், சீரழிந்த மேல்மண் குவியல்களை மீட்டெடுத்தல் ஆகியவற்றுக்கு இது உதவுகிறது; அபாயகரமான சரிவுகளில் கைமுறை நடவைக் குறைத்து, பெரும் பரப்புகளை விரைவாகப் பசுமையாக்க உதவுகிறது.