புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) 2024–25-ஆம் ஆண்டுக்கான தொழில்துறை ஆண்டு ஆய்வு (Annual Survey of Industries – ASI) முடிவுகளை வெளியிட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 2.67 லட்சமாக உயர்ந்துள்ளது; மொத்த வேலைவாய்ப்பு 7.19% அதிகரித்து 2.10 கோடியை எட்டியுள்ளது. மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) 9.59%, நிலை மூலதனம் 10.54%, தொழில்துறை உற்பத்தி 7.81%, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த ஊதியம் 12.08% உயர்ந்துள்ளன. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்கள் இணைந்து உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் சுமார் 56% பங்கு வகிக்கின்றன. அடிப்படை உலோகங்கள், மோட்டார் வாகனங்கள், வேதிப்பொருள்கள், மருந்துகள், உணவுப் பொருள்கள் ஆகியவை உற்பத்தித் துறை GVA-வில் 45%-க்கும் மேல் பங்களிக்கின்றன.