புது தில்லியில் நடைபெற்ற எரிசக்தி மற்றும் வள நிறுவனத்தின் (TERI) 25வது உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாட்டின்போது, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) 'ஹிம்-கனெக்ட்' (Him-CONNECT) நிகழ்வை நடத்தியது. இந்திய இமயமலைப் பகுதியில் ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களை ஸ்டார்ட்-அப்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்களுடன் இணைக்கும் தளமே ஹிம்-கனெக்ட். பலவீனமான இமயமலைப் பகுதிக்கான ஆய்வுகளை நடைமுறைத் தீர்வுகளாகவும் முதலீட்டுக்குத் தயாரான முயற்சிகளாகவும் மாற்றுவதே நோக்கம்.