ஆக்கிரமிப்பு அயல் தாவர இனமான சீமைக் கருவேலத்தை (Prosopis juliflora) தமிழ்நாட்டிலிருந்து அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மெக்சிகோ, தென் அமெரிக்கா, கரீபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் காலனி ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இது ஃபேபேசி (Fabaceae) குடும்பத்தைச் சேர்ந்த புதர் அல்லது சிறு மரம்; மெஸ்கிட் வகையைச் சேர்ந்தது.
- வறண்ட, அரை வறண்ட பகுதிகளில் வேகமாகப் பரவி, உள்ளூர்த் தாவரங்களை முந்தி, அதிக நிலத்தடி நீரை உறிஞ்சி, மண் தரத்தைக் கெடுத்து, பல்லுயிர்ப் பெருக்கத்தைக் குறைக்கிறது.
- உள்ளூர்த் தாவரங்களை மீட்டெடுத்தல், நிலத்தடி நீரை மேம்படுத்துதல், பல்லுயிர்ப் பாதுகாப்பு ஆகியவை உத்தரவின் நோக்கம்.
- தனியார் நில உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் தங்கள் நிலத்திலிருந்து இத்தாவரங்களை அகற்ற வேண்டும்; இல்லையெனில் அதிகாரிகள் அகற்றி அதற்கான செலவை வசூலிப்பர்.