A.P. மோலர்–மெர்ஸ்க் (A.P. Moller–Maersk) நிறுவனம், இந்தியாவில் தனது முதல் உலர்கப்பல்துறைப் பணியை (Drydocking) தமிழ்நாட்டில் சென்னை அருகே உள்ள லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனத்தின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் இயங்கும் மெர்ஸ்க் சட்டோகிராம் (Maersk Chattogram) என்ற சரக்குப் பெட்டகக் கப்பலுக்கு 2026 அக்டோபரில் இப்பணி மேற்கொள்ளப்படும். ஆய்வு, பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கத்திற்காக ஒரு கப்பலை நீரிலிருந்து வெளியே எடுக்கும் செயல்முறையே உலர்கப்பல்துறைப் பணி எனப்படுகிறது. இதன் மூலம் நாட்டில் அந்நிறுவனத்தின் முதல் இத்தகைய பணி நடைபெறும் இடமாக காட்டுப்பள்ளி அமைகிறது.