2026 அக்டோபர் 8 அன்று புது டெல்லியில், ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர், காசநோய் இல்லா பாரத இயக்கத்தின் (TB Mukt Bharat Abhiyaan) கீழ் ‘சுகாதாரத்துக்கான கூட்டுக் குழு’ (Joint Squad for Health – JOSH) குழுக்களைத் தொடங்கி வைத்தார். இளைஞர் பங்கேற்பு, முன்கூட்டியே கண்டறிதல், சிகிச்சை ஆதரவு, களங்கத்தைக் குறைத்தல் மூலம் காசநோயை (TB) ஒழிப்பது இதன் நோக்கம். முதல் கட்டத்தில் 11 மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் 55 மாவட்டங்கள் உள்ளடக்கப்படுகின்றன. ஒவ்வொரு JOSH குழுவிலும் ஐந்து MY Bharat தன்னார்வலர்கள், ஐந்து தேசிய மாணவர் படை (NCC) மாணவர்கள் இருப்பர்; இவர்களை ஒரு முதல்நிலை (Class-I) அலுவலர் மேற்பார்வையிடுவார். TB Mukt Bharat செயலி, ‘குஷி அவதார் (e-Sangini)’ எனும் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியாளர் துணையுடன், தன்னார்வலர்கள் காசநோய்ப் பரிசோதனை, ஊட்டச்சத்து ஆலோசனை, தொடர் சிகிச்சையை ஊக்குவிப்பர். 2030 நீடித்த வளர்ச்சி இலக்கு (SDG) காலக்கெடுவுக்கு முன்பே இந்தியாவைக் காசநோய் இல்லா நாடாக்குவது இலக்கு.