2026 ஜனவரி-செப்டம்பர் காலத்தில் சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 40.7% உயர்ந்த போதிலும், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 105.93 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டியது. இரு நாடுகளுக்கிடையேயான மொத்த வர்த்தகம் 25.4% அதிகரித்து 144.45 பில்லியன் டாலரை எட்டியது. சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 19.26 பில்லியன் டாலர்; சீனாவிலிருந்து இறக்குமதி 23.3% உயர்ந்து 125.19 பில்லியன் டாலர். கடல் உணவுப் பொருட்கள், நாப்தா, அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள் (PCB) ஆகியவை சீனாவுக்கான முக்கிய இந்திய ஏற்றுமதிகள். உரங்கள், அரிய மண் தனிமங்கள் போன்றவற்றின் மீது சீனா விதித்துள்ள ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளும் இந்தியாவுக்குக் கவலை அளிக்கின்றன. 2025-ம் ஆண்டில் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை 116.12 பில்லியன் டாலராக இருந்தது.