அதம்யா (Adamya) வகையைச் சேர்ந்த புதிய தலைமுறை அதிவேக ரோந்துக் கப்பலான (Fast Patrol Vessel – FPV) ICGS அச்சலை (ICGS Achal) இந்தியக் கடலோரக் காவல்படை கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் (Goa Shipyard Limited) பணியில் இணைத்துள்ளது. இவ்வகையைச் சேர்ந்த எட்டுக் கப்பல்கள் கொண்ட வரிசையில் இது ஐந்தாவது கப்பலாகும். அதிவேக ரோந்துக் கப்பல்கள் கடலோர ரோந்து, கண்காணிப்பு, இந்தியாவின் கடல் மண்டலங்களைப் பாதுகாத்தல் ஆகிய பணிகளுக்குப் பயன்படுகின்றன. இக்கப்பலின் இணைப்பு, கடற்கரையைப் பாதுகாக்கவும் கடலில் நிகழும் சம்பவங்களுக்கு விரைந்து செயல்படவும் கடலோரக் காவல்படையின் திறனை வலுப்படுத்துகிறது.