சர்வதேச அங்கீகாரம்: உலக அரங்கில் இந்தியப் பால் பொருட்கள் சாதனை
பிரேசிலின் சாவோ பாலோவில் நடைபெற்ற உலக சீஸ் (Cheese) போட்டி 2026-ல் இந்தியா முதல்முறையாகப் பங்கேற்று, 1 சூப்பர் கோல்டு, 2 கோல்டு மற்றும் 1 சில்வர் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் சீஸ் தயாரிப்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.
விருது வென்ற தயாரிப்புகள்
- சூப்பர் கோல்டு: மும்பையைச் சேர்ந்த எலிபெத்ரியா (Eleftheria) நிறுவனத்தின் 'குல்மார்க்' (Gulmarg) சீஸ் இவ்விருதை வென்றது.
- கோல்டு: லடாக்கின் புகழ்பெற்ற யாக் சுர்பி (Yak Churpi) மற்றும் எலிபெத்ரியா புரூனோஸ்ட் ஆகியவை தங்கப் பதக்கம் வென்றன.
- சில்வர்: எலிபெத்ரியா காளி மிரி (Eleftheria Kaali Miri) வெள்ளிப் பதக்கம் வென்றது.
முக்கியத்துவம்
லடாக்கின் 'யாக் சுர்பி' போன்ற பாரம்பரியப் பொருட்களுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், இந்தியக் கால்நடைத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியை உணர்த்துகிறது. டிஎன்பிஎஸ்சி (TNPSC) மாணவர்கள் 'இந்தியப் பொருளாதாரம்' மற்றும் 'புவியியல் - கால்நடைகள்' பாடப்பகுதிகளுக்காக இந்தச் செய்தியை அறிந்துகொள்வது அவசியமாகும்.