பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் இந்தியா ஆப்டெல் லிமிடெட் (IOL), உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கருட்' (GARUD) உயர் தெளிவுத் தொலைநோக்கிகளை (binoculars) பொதுமக்கள் சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. இவை டேராடூன் படைக்கலத் தொழிற்சாலையால் (Ordnance Factory, Dehradun) உருவாக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டவை. பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்கள் உள்நாட்டு ஒளியியல் தயாரிப்புகளைப் பொதுச் சந்தைக்குக் கொண்டுவரும் முயற்சியாக இது அமைகிறது.