இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் – தேசிய மீன் மரபு வளப் பணியகத்தின் (ICAR-NBFGR) விஞ்ஞானிகள் கர்நாடகாவின் காவிரி ஆற்றுப் படுகையில் லேபியோ காகே (Labeo kaage) என்ற புதிய நன்னீர் மீன் இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். மண்டியா மாவட்டத்தில் காவிரியின் சிவனசமுத்திரம் பகுதியில் இம்மீன் கண்டறியப்பட்டது. அதன் கருமை நிற உடலைக் குறிக்கும் வகையில், காகத்தைக் குறிக்கும் கன்னடச் சொல்லான “காகே”-யிலிருந்து இப்பெயர் சூட்டப்பட்டது; உள்ளூர் மக்கள் இதை “காகே மீனு” என அழைக்கின்றனர். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் கருமை நிற லேபியோ இனக்குழுவைச் சேர்ந்தது. 1870-இல் முதன்முதலில் விவரிக்கப்பட்ட “டார்க் லேபியோ” எனப்படும் லேபியோ நைக்ரெசென்ஸ் (Labeo nigrescens) மீனின் அடையாளத்தையும் இவ்வாய்வு தெளிவுபடுத்தியது; லேபியோ செகிடா, லேபியோ உரு ஆகிய இனங்கள் 2025-இல் கேரளாவில் கண்டறியப்பட்டன.