நாட்டின் செமிகண்டக்டர் சூழலமைப்பை வலுப்படுத்த ₹1.27 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடன் 'செமிகான் இந்தியா திட்டம் 2.0'-ஐ ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆறு தூண்களைக் கொண்ட இத்திட்டம், வேஃபர் தயாரிப்பு முதல் சிப் உற்பத்தி வரையிலான மதிப்புச் சங்கிலியையும் தொடர்புடைய சூழலமைப்பு மேம்பாட்டையும் உள்ளடக்கியது. உலகச் செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியில் இந்தியாவை முக்கிய நாடாக்கி, உள்நாட்டு உற்பத்தியையும் சிப் வடிவமைப்பையும் ஊக்குவிப்பது இதன் நோக்கம். திறன்மிகு பணியாளர், முதலீட்டுச் சூழல், கொள்கை ஆதரவு, எளிதாகத் தொழில் செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. முதல் திட்டம் (1.0) அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை அடிக்கல் மற்றும் வணிக உற்பத்தி நிலைக்குக் கொண்டு சென்றது.