குஜராத் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (GBRC) மூலம் இந்தியாவின் முதல் மாநில அளவிலான விளையாட்டு மரபணுவியல் திட்டத்தைக் குஜராத் தொடங்கியுள்ளது. விளையாட்டு வீரர்களின் வலிமை, சகிப்புத்திறன், மீட்சி, காயம் ஏற்படும் அபாயம் தொடர்பான மரபணு மற்றும் உயிரியல் காரணிகளை இது ஆய்வு செய்யும். ஆண்டுக்கு 2,000 மாதிரிகளும், ஐந்து ஆண்டுகளில் சுமார் 10,000 மாதிரிகளும் சேகரித்து, குஜராத் விளையாட்டு வீரர் மரபணுத் தரவுத்தளம் (G-AGD) உருவாக்கப்படும். அறிவியல் அடிப்படையிலான திறமை அடையாளம், தனிப்பயன் பயிற்சி, ஊட்டச்சத்து, மீட்சித் திட்டங்களுக்கு இது உதவும்.