"இந்திய வௌவால்களின் நிலை (2024–25)" என்ற தலைப்பிலான, வௌவால்கள் குறித்த இந்தியாவின் முதல் தேசிய அறிக்கை, இந்தப் பாலூட்டிகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை விவரிக்கிறது. இதனை இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை (Nature Conservation Foundation) மற்றும் பேட் கன்சர்வேஷன் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்தன.
- இந்தியாவில் சுமார் 135 வௌவால் இனங்கள் உள்ளன; அவற்றில் 16 அகணிய இனங்கள் (இந்தியாவில் மட்டுமே காணப்படுபவை).
- IUCN படி சுமார் 7 இனங்கள் அச்சுறுத்தலில் உள்ளன; 35 இனங்கள் குறித்துப் போதிய தரவு இல்லை.
- வௌவால்கள் மகரந்தச் சேர்க்கை, விதைப் பரவல், பூச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றில் உதவி, சூழல் சமநிலையைப் பேணுகின்றன.
- அச்சுறுத்தல்கள்: நகரமயமாக்கல், காடழிப்பு, காலநிலை மாற்றம், கோவிட்-19-க்குப் பிறகான எதிர்மறைப் பார்வை.