இயற்கை மருத்துவ தினம் 2026 – நவம்பர் 18; கருப்பொருள் 'பிராக்ருதிக் சிகித்சா, ஸ்வஸ்த் பாரத்'
நவம்பர் 18 அன்று கடைப்பிடிக்கப்படும் இயற்கை மருத்துவ தினம், இயற்கை சார்ந்த சுகாதார நடைமுறைகளையும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் ஊக்குவிக்கிறது. 1945 நவம்பர் 18 அன்று மகாத்மா காந்தி அகில இந்திய இயற்கை மருத்துவ அறக்கட்டளையின் (All India Nature Cure Foundation Trust) வாழ்நாள் தலைவரானதை இத்தினம் நினைவுகூர்கிறது. ஆயுஷ் அமைச்சகம் 2018 முதல் ஆண்டுதோறும் இத்தினத்தைக் கொண்டாடி வருகிறது. 2026-ஆம் ஆண்டின் கருப்பொருள்: “பிராக்ருதிக் சிகித்சா, ஸ்வஸ்த் பாரத்” (“இயற்கை மருத்துவம், ஆரோக்கிய இந்தியா”).