இந்தியக் கப்பல்கள் கடலில் பறக்கவிடும் கொடிகள் தொடர்பான புதிய விதிகளை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் அறிவித்தது; இது 1961 பிப்ரவரி 9 ஆணைக்குப் பதிலாக வருகிறது. வணிகக் கப்பல் போக்குவரத்துச் சட்டம், 2025-இன் கீழ் அறிவிக்கப்பட்ட இவ்விதிகளின்படி, அச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்திய வணிகக் கப்பல்கள் 'சிவப்புக் கொடி' (Red Ensign) பறக்கவிடும். இக்கொடி சிவப்பு நிறத்தில், கொடிக்கம்பத்துக்கு அருகிலுள்ள மேல் மூலையில் (upper canton) இந்தியத் தேசியக் கொடியுடன் இருக்கும்; இந்தியக் கொடிச் சட்டம், 2002-இன்படி இதன் நீளம் அகலத்தின் ஒன்றரை மடங்காக இருக்கும். அரசுக்குச் சொந்தமான கப்பல்கள், அச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், 'நீலக் கொடி' (Blue Ensign) பறக்கவிடும்; அவற்றின் உரிமையாளரான துறை, ஆணையம் அல்லது அமைப்பின் சின்னம் அதில் இடம்பெறும். பாதுகாப்பு அமைச்சகத்துக்காக மட்டுமே இயங்கும் இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.