இந்தியக் கடற்படையும் ஐக்கிய இராச்சியத்தின் ராயல் கடற்படையும் தங்களது வருடாந்திர இருதரப்புக் கடல்சார் பயிற்சியான கொங்கன் 2026 (KONKAN 2026) பயிற்சியை, ஐக்கிய இராச்சியத்தின் பிளைமவுத் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நடத்தின. இரு கடற்படைகளுக்கும் இடையே ஆண்டுதோறும் நடைபெறும் கொங்கன் பயிற்சித் தொடர், கடலில் இணைந்து செயல்படுவதைப் பயிற்சி செய்யவும், தொழில்முறை அனுபவங்களைப் பகிரவும், ஒருங்கிணைந்து இயங்கும் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. கடல்சார் பாதுகாப்பில் இந்தியா–பிரிட்டன் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்புக் கூட்டுறவை இப்பயிற்சி பிரதிபலிக்கிறது.