மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், பூச்சிக்கொல்லிச் சட்டம், 1968-க்கு (Insecticides Act, 1968) மாற்றாக பூச்சிக்கொல்லி மேலாண்மை வரைவு மசோதா, 2025-ஐ வெளியிட்டது. இது பூச்சிக்கொல்லிகளின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது; மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவுக் குழுவை அமைக்க வகை செய்கிறது; உரிமம், முத்திரை (லேபிளிங்) மற்றும் டிஜிட்டல் பதிவைக் கட்டாயமாக்குகிறது; பாதுகாப்பற்ற அல்லது சட்டவிரோதப் பயன்பாட்டுக்கான அபராதங்களையும் உள்ளடக்கியுள்ளது.