தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT), பாரத் ஔத்யோகிக் விகாஸ் யோஜனா (BHAVYA) திட்டத்துக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது முதலீட்டுக்குத் தயாரான, உலகத் தரம் வாய்ந்த தொழிற்பூங்காக்களை உருவாக்குவதற்கான மத்தியத் துறைத் திட்டமாகும் (Central Sector Scheme). 2026-27 முதல் 2031-32 வரை சுமார் ₹33,660 கோடி மொத்த ஒதுக்கீட்டில் 100 தொழிற்பூங்காக்களை உருவாக்குவது இதன் இலக்கு. இத்திட்டம் 'மேக் இன் இந்தியா', பிஎம் கதி சக்தி, உற்பத்தி வளர்ச்சி, சரக்குப் போக்குவரத்து மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு ஆதரவளிக்கிறது. நிறுவனங்கள் சட்டம், 2013-இன் கீழ் சிறப்பு நோக்க நிறுவனங்கள் (SPV) மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்படும்; தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுக் கழகம் திட்ட மேலாண்மை முகமையாகச் செயல்படும்.