இந்திய நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்பை மதிப்பிடும் நுகர்வோர் நீதி அறிக்கை 2026-ஐ ‘இந்தியா ஜஸ்டிஸ் ரிப்போர்ட்’ (India Justice Report) வெளியிட்டுள்ளது.
- 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன; பல வழக்குகள் 3–5 மாதக் காலவரம்பைத் தாண்டித் தாமதமாகின்றன.
- சுமார் 40% காலியிடங்கள், மோசமான உள்கட்டமைப்பு, சமரசத் தீர்வை (mediation) குறைவாகப் பயன்படுத்துதல் போன்ற சிக்கல்களை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
- பெரும்பாலான புகார்கள் வங்கி, காப்பீடு, வீட்டுவசதித் துறைகள் தொடர்பானவை.
நுகர்வோருக்கு விரைவான, மலிவான தீர்வு கிடைக்க நுகர்வோர் ஆணையங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இவை உணர்த்துகின்றன.