இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை 1 அன்று பட்டயக் கணக்காளர்கள் (CA) தினம் அனுசரிக்கப்படுகிறது. 1949-ஆம் ஆண்டு இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) தொடங்கப்பட்டதை இத்தினம் நினைவுகூர்கிறது. நிதி, தணிக்கை மற்றும் பொருளாதாரத்தில் பட்டயக் கணக்காளர்களின் பங்களிப்பை இத்தினம் போற்றுகிறது.