டிஜிட்டல் இந்தியா BHASHINI பிரிவும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகமும் (IISc) இணைந்து சௌராஷ்டிர மொழிக்கான உரையிலிருந்து பேச்சு (Text-to-Speech) மாதிரிகளை உருவாக்கியுள்ளன. சௌராஷ்டிரம் என்பது தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்டிர சமூகத்தினரால் பெரும்பாலும் பேசப்படும் சிறுபான்மை இந்தோ-ஆரிய மொழியாகும். எழுதப்பட்ட சௌராஷ்டிர உரையை ஒலிவடிவப் பேச்சாக மாற்றும் இம்மாதிரிகள், இம்மொழியை டிஜிட்டல் தளங்களுக்குக் கொண்டு செல்ல உதவும்.