பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மற்றும் பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள், மிகக் குறைந்த புவி சுற்றுப்பாதை (Very Low Earth Orbit – VLEO) செயற்கைக்கோள் அமைப்புகளைக் கூட்டாக உருவாக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. VLEO என்பது புவியிலிருந்து 150 கி.மீ. முதல் 450 கி.மீ. உயரத்திலுள்ள சுற்றுப்பாதைகளைக் குறிக்கும். பாதுகாப்பு மற்றும் குடிமைப் பயன்பாடுகளுக்கான உள்நாட்டுச் செயற்கைக்கோள் தளங்களை உருவாக்குவதே இதன் நோக்கம். வளிமண்டல இழுவையை எதிர்கொள்வதால் இவற்றுக்கு மேம்பட்ட உந்துவிசை அமைப்புகள் தேவை. புவிக்கு அருகில் இருப்பதால் துல்லியமான படங்களும் வேகமான சமிக்ஞைப் பரிமாற்றமும் கிடைக்கும்; செயலிழந்த செயற்கைக்கோள் வளிமண்டலத்தில் எரிந்துவிடுவதால் விண்வெளிக் குப்பையும் குறையும்.