நிதி ஆயோக்கின் கீழ் இயங்கும் அடல் புத்தாக்க இயக்கம் (AIM), இந்தியாவின் முதல் 'மாநிலப் புத்தாக்க இயக்கத்தை' (SIM) திரிபுராவில் தொடங்கியது. AIM 2.0-ன் ஒரு பகுதியான SIM, மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் தங்களுக்கென வலுவான புத்தாக்க மற்றும் தொழில்முனைவுச் சூழலை உருவாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியை ஏற்ற முதல் மாநிலம் திரிபுரா; பிற மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.