ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன், அசாம் அரசு குகி தீவிரவாதக் குழுக்கள் மற்றும் ஹமார் மக்கள் மாநாடு-ஜனநாயகம் (Hmar People's Convention-Democratic) அமைப்புடன் தீர்வு ஒப்பந்தக் குறிப்பாணைகளில் (MoS) கையெழுத்திட்டுள்ளது. கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்து அப்பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். குகி நல மற்றும் மேம்பாட்டுக் கவுன்சில் (KWDC), ஹமார் நல மற்றும் மேம்பாட்டுக் கவுன்சில் (HWDC) அமைக்கப்படும். முன்னாள் உறுப்பினர்களின் மறுவாழ்வும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சமூக-பொருளாதார மேம்பாடும் இவ்வொப்பந்தங்களில் அடங்கும்.