வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), உலர் முழு முட்டைப் பொடியின் இந்தியாவின் முதல் வணிக ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
22.6 மெட்ரிக் டன் அளவிலான இச்சரக்கு ஒடிசாவின் பாலாங்கிரிலிருந்து ஆஸ்திரியாவுக்கு அனுப்பப்பட்டது. இது இந்தியக் கோழிப்பண்ணைப் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட புதிய சந்தையைத் திறப்பதோடு, கிழக்கு இந்தியாவிலிருந்து பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதியின் வாய்ப்பையும் காட்டுகிறது. APEDA ஒன்றிய வணிக அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.