நிலையான, ஆரோக்கியமான உணவு அமைப்புகளை ஊக்குவிக்க, குண்ட்லியில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பத் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-K) ANVESH-2026 மாநாட்டை நடத்தியது.
- உணவுப் பதப்படுத்தும் துறையில் புத்தாக்கம், நிலைத்தன்மை, 'உணவே மருந்து' (Food as Medicine) என்ற கருத்து ஆகியவற்றை இம்மாநாடு முன்னிறுத்தியது.
- NIFTEM-K, ஒன்றிய உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.
- தற்போது இந்தியாவின் உணவு விளைபொருட்களில் 12–13% மட்டுமே பதப்படுத்தப்படுகிறது; அடுத்த ஐந்தாண்டுகளில் இதனை 25% ஆக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
- அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் ஆண்டுக்குச் சுமார் ₹1.10 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.