ஆயுஷ் அமைச்சகம், 9-ஆவது சித்த மருத்துவ தினத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் 'உலக நலனுக்கு சித்தா' (Siddha for Global Health) என்ற கருப்பொருளில் கொண்டாடியது. சித்த மருத்துவத்தின் நிறுவனராகக் கருதப்படும் அகத்திய முனிவரின் பிறந்த நாளான ஜனவரி 6 அன்று ஒவ்வொரு ஆண்டும் சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. சித்த மருத்துவம் தமிழ்நாட்டில் தோன்றியது; ஆயுஷின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் இதுவும் ஒன்று.