மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில், தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட காமினி என்ற சிவிங்கிப்புலி மூன்று குட்டிகளை ஈன்றது; இதனால் இந்தியாவின் சிவிங்கிப்புலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. இந்தியாவில் பிறந்த குட்டிகளின் எண்ணிக்கை இப்போது 27-ஐ எட்டியுள்ளது. நமீபியா, தென்னாப்பிரிக்காவிலிருந்து 20 சிவிங்கிப்புலிகளைக் கொண்டுவந்து 2022-23-ல் சிவிங்கிப்புலித் திட்டம் தொடங்கப்பட்டது. 1952-ல் இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப்புலி, சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பியுள்ளது.