மகாராஷ்டிராவின் ஷீர்டியில், 300 கி.மீ. தாக்குதல் வரம்பு கொண்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு உலகளாவிய ராக்கெட் ஏவு அமைப்பான (Universal Rocket Launching System) 'சூர்யாஸ்திரா' அறிமுகம் செய்யப்பட்டது. சூர்யாஸ்திரா, 150 கி.மீ. மற்றும் 300 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய துல்லிய வழிகாட்டல் ராக்கெட் அமைப்பாகும். இந்த அமைப்பு இந்தியப் பீரங்கிப் படைக்கு நீண்ட தூரத் துல்லியத் தாக்குதல் திறனைச் சேர்ப்பதோடு, பாதுகாப்புத் தளவாடங்களில் தற்சார்பை நோக்கிய ஒரு படியாகவும் அமைகிறது.