2024, 2025-இல் நடந்த ஆய்வுகளின்போது, எகிப்தின் அரசர்களின் பள்ளத்தாக்கில் உள்ள தீப்ஸ் கல்லறைத் தொகுதியின் ஆறு கல்லறைகளில், கி.பி. 1-3-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 30 தமிழ் பிராமி கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டன. பிராகிருத, சமஸ்கிருத எழுத்துகளுடன் காணப்படும் இவை இந்தியப் பயணிகளின் வருகையைச் சுட்டுகின்றன. 'சிகை கொற்றன்' என்ற பெயர் ஐந்து கல்லறைகளில் எட்டு முறை இடம்பெற்றுள்ளது. தமிழகத்துக்கும் ரோமப் பேரரசுக்கும் இடையிலான பண்டைய வணிகத்துக்கு இவை கூடுதல் சான்றாகின்றன; இதுபோன்ற தமிழ்ப் பெயர்கள் முன்னர் செங்கடல் துறைமுகமான பெரெனிகேவிலும் கண்டறியப்பட்டன.