அறிவிப்புகள்
Tamil Test
Tamil Test Plus Plus திட்டங்களைப் பார்க்க
உள்நுழை இலவசப் பதிவு

குறைந்தது 2 எழுத்துகளைத் தட்டச்சு செய்யவும்.

பிரபலமான தேடல்கள்

பிரபலமான வினாடி வினாக்கள்

பொருளாதாரம் 2 நிமிட வாசிப்பு

மறுசுழற்சி எரிசக்தி திறனில் உலக அளவில் இந்தியா 3-வது இடம்: 50% இலக்கை எட்டி சாதனை!

சேமி

தூய்மை ஆற்றலில் புதியதொரு மைல்கல்: 50% எல்லையைக் கடந்து இந்தியா சாதனை

 

சர்வதேச மறுசுழற்சி எரிசக்தி முகமையின் (IRENA) புதிய அறிக்கையின்படி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை நிறுவுவதில் பிரேசிலை முந்தி உலக அளவில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியலில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

 

முக்கியப் புள்ளிவிவரங்கள் மற்றும் சாதனைகள்:

 

இந்தியாவின் ஒட்டுமொத்தப் புதைபடிவமற்ற (Non-fossil fuel) எரிசக்தித் திறன் 262.7 ஜிகாவாட் (GW) என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது. இது நாட்டின் மொத்த மின்சார உற்பத்தித் திறனில் 50 விழுக்காட்டிற்கும் (50%) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாரிஸ் ஒப்பந்த இலக்கை இந்தியா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே எட்டியுள்ளது.

 

  • சூரிய ஆற்றல் வளர்ச்சி: இந்தியாவின் இந்த வளர்ச்சிக்குச் சூரிய மற்றும் காற்று ஆற்றல் ஆகியவை முக்கியப் பங்காற்றியுள்ளன. குறிப்பாக, ஒரே ஆண்டில் 44 ஜிகாவாட் சூரிய மின்சக்தித் திறன் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

 

  • உள்நாட்டு உற்பத்தித் திறன் அதிகரிப்பு: இந்தியாவின் உள்நாட்டுச் சூரிய ஆற்றல் உபகரண உற்பத்தித் திறன் கணிசமாக உயர்ந்துள்ளது. சோலார் மாட்யூல் (Solar PV Module) உற்பத்தித் திறன் 2024-ல் இருந்த 38 GW-லிருந்து 74 GW ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், சோலார் செல்கள் (Solar Cell) உற்பத்தித் திறனும் 9 GW-லிருந்து 25 GW ஆக உயர்ந்துள்ளது.


---

உள்நாட்டு உற்பத்தியில் உள்ள சவால்கள்

 

உள்நாட்டில் அசெம்பிளிங் செய்யும் கட்டமைப்பு அதிகரித்திருந்தாலும், சோலார் பேனல் தயாரிப்பதற்கான அடிப்படை மூலப்பொருட்களான வேஃபர்கள் (Wafers) மற்றும் பாலிசிலிகான் (Polysilicon) போன்ற மேல்நிலை உதிரிபாகங்களில் 60% முதல் 80% வரை இன்னமும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இத்துறையில் முழுமையான தற்சார்பை அடைய இன்னும் கூடுதல் கொள்கை சீர்திருத்தங்கள் தேவை எனப் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

டிஎன்பிஎஸ்சி (TNPSC) மற்றும் மத்திய அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், 'இந்தியப் பொருளாதாரம்' மற்றும் 'சுற்றுச்சூழல் புவியியல்' பாடப்பகுதிகளுக்காக இத்தரவுகளைக் குறித்துக் கொள்வது அவசியமாகும்.