ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, 2025 நில அதிர்வுக் குறியீட்டை (IS 1893) இந்தியத் தர நிர்ணய அமைவனம் (BIS) திரும்பப் பெற்றுள்ளது. முந்தைய தரநிலையான IS 1893 (பகுதி 1): 2016 மீண்டும் இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது.
நில அதிர்வுக் குறியீடு என்பது, நிலநடுக்க விசைகளைத் தாங்கி சேதத்தைக் குறைக்கும் வகையில் கட்டடங்களை வடிவமைப்பதற்கான தரநிலைகளின் தொகுப்பு. இதன்படி இந்தியா நான்கு நில அதிர்வு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: மண்டலம் II (குறைவு), மண்டலம் III (மிதமானது), மண்டலம் IV (அதிகம்), மண்டலம் V (மிக அதிகம்). இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 59% நிலநடுக்க அபாயமுள்ளதாகக் கருதப்படுகிறது.