சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முதல்முறையாக 100 பில்லியன் டாலரைக் கடந்து, 2025–26 நிதியாண்டில் (ஏப்ரல்–பிப்ரவரி) சுமார் 102 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
- ஒரு குறிப்பிட்ட காலத்தில் இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகமாக இருப்பதே வர்த்தகப் பற்றாக்குறை ஆகும்.
- மின்னணுப் பொருட்கள், இயந்திரங்கள், தொலைத்தொடர்புக் கருவிகள், மருந்து மூலப்பொருட்கள் (APIs) போன்ற உயர் மதிப்புப் பொருட்களை இந்தியா சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.
- இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பெட்ரோலியப் பொருட்கள், தாமிரப் பொருட்கள், சில மின்னணுப் பொருட்கள் குறைந்த மதிப்புடையவை.
- இது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, முக்கியத் துறைகளில் சீன இறக்குமதிச் சார்பு, குறைந்த சந்தை அணுகல் போன்ற கவலைகளை எழுப்புகிறது.